இந்திய தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் குறித்து ஆலோசனை!!

ராணிப்பேட்டை மாவட்டம்,இந்திய தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியல் பார்வையாளர்  ஆஷிம் குமார் மோடி இ.வ.ப., அவர்கள் (இணைச் செயலாளர், வருமான வரித் துறை) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்திய தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியல் பார்வையாளர்  ஆஷிம் குமார் மோடி இ.வ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (29.1.2026)  4 சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்  (SIR) 2026 பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்கள்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டதை  தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் திருத்தம் பணிகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர்கள் முரண்பாடு, முகவரி முரண்பாடு உள்ளவர்கள் மேல் முறையீடு செய்த விண்ணப்பங்கள் மீது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விசாரணை பணிகள்  மற்றும் களஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என  இராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விவரித்தார்கள். தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் பொழுது மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் விரிவாக விவரித்தார்கள். 

இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் SIR பணிகள் தொடர்பாகவும் அதில் நிலவிய பிரச்சனைகள் மற்றும் பணிகளை முடித்த தன்மைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார். தொடர்ந்து   வாக்காளர் பட்டியல்  சிறப்பு தீவிர திருத்த பணியில் அலுவலர்கள் சிறப்பாக மேற்கொண்டு உள்ளனர். தற்பொழுது மேல்முறையீடு விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு செய்யும் பணிகளும் திருப்திகரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையின் கீழ் அனைத்து பணியாளர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளீர்கள். இதற்கு எங்களுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். மேலும் இப்பணிகளின் பொழுது தங்களுக்கு ஏற்பட்ட கருத்துக்கள் மற்றும் இப்பணிகளில் மேம்படுத்த தேவையான ஆலோசனைகள் இருந்தால் அதை மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் தெரியப்படுத்தலாம். ஏனென்றால் இனிவரும் காலங்களில் இது போன்ற பணிகள் மேற்கொள்ளும் பொழுது நடப்பு பணிகளில் கையாண்ட சிரமங்களை களைந்து சுமூகமாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்வதற்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பணிகளை எளிமைப்படுத்த உதவியாக இருக்கும். இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் அனைத்து துறை அலுவலர்களும் சிறப்பாக பணியாற்றியமைக்கு பாராட்டுதல் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து எஞ்சியுள்ள பணிகளை விரைவாக முடித்து முடித்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி இராணிப்பேட்டை நகராட்சி காந்தி சாலை மற்றும் வாலாஜா வட்டம், தென்நந்தியாலம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்  பட்டியல் சிறப்பு தீவிர திருத்த 2026 பணி, வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் முரண்பாடுகளை களைந்திட கண்டறியப்பட்ட விண்ணப்பங்கள் மீது நேரடியாக கள ஆய்வு செய்து வாக்காளர்கள் விவரங்களை சரி பார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து கேட்டறிந்தார். தொடர்ந்து விவரங்கள் கைபேசியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உறுதி செய்யப்படுவதையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து வாக்காளர்களிடம் இப்பணிகள் குறித்து கருத்துகளையும் எளிமையாக இருந்ததா அல்லது வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு அடிக்கடி மற்ற இடங்களுக்கு சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை தொடர்பு கொண்டீர்களா? என்பதை கேட்டறிந்தார்கள். அப்பொழுது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டிற்கு வருகை தந்ததாகவும்,  தற்பொழுது முரண்பாடுகளை களையும் பணிகளிலும் நேரடியாகவே கள ஆய்வு செய்து எவ்வித சிரமம் இன்றி எங்களுக்கு எளிதில் தீர்வுகளை அளித்து வருகின்றனர் என வாக்காளர் பட்டியல் பார்வையாளரிடம் வாக்காளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்  ராஜி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!