விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கம்பம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற அறிமுக கூட்டம்!!
எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியை பலப்படுத்தும் விதமாக 234 தொகுதிகளுக்கும் புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரை அறிவிப்பு செய்து புதிய வரலாற்றை பதிவு செய்தார் அதன்படி
தேனி மாவட்டம், 4 சட்டமன்றங்களை உள்ளடக்கியது. கம்பம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர். அயூப்கான் தலைமையில் மாவட்ட பொருளாளர். ஆரோக்யசாமி மாவட்ட செய்தி தொடர்பாளர். பெர்க்மான்ஸ் மாவட்ட துணைச் செயலாளர்கள். முருகேசன், அண்ணாதுரை, தேவாரம், செல்வம், கவிதா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் பச்சையப்பன்,
கம்பம்மோகன் ஆகிய மாவட்ட நிர்வாகத்தினரை;
தேனி திண்டுக்கல் மேனாள் மண்டல செயலாளர். தமிழ்வாணன் மற்றும் தேனி மண்டல செயலாளர். அரிமா.ஜே.ரபீக்,
போடி _ கம்பம் மண்டல துணைச் செயலாளர். சோ.சுருளி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கம்பம் சட்டமன்ற தொகுதியின் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினரை அறிமுகம் செய்து வைத்து எழுச்சித் தமிழர் அறிவித்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் கைகோர்த்து களப்பணியாற்றி கம்பம் சட்டமன்ற தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை பலப்படுத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட, நகர், ஒன்றிய, பேரூர், முகாம் பொறுப்பாளர்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட செய்தியாளர் ராஜா.

கருத்துகள்
கருத்துரையிடுக