மலையனூரில் சமூக மரியாதையின் பொங்கல்: தூய்மை பணியாளர்கள் கையால் வீரர்களுக்கு பரிசளிப்பு!!

கடலூர் மாவட்டம், மலையனூர் ஊராட்சியில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சமூக சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் தூய்மை பணியாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்தது அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது.

பரிசுகளை வழங்கிய தூய்மை பணியாளர்கள், இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வீரர்களை கௌரவித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தனர். விழாவில் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!