திருமயத்தில் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆரின் திருவுருபடத்தோடு அமைதி ஊர்வலம், மற்றும் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அஇஅதிமுக கட்சி அலுவலகத்தில் மறைந்த தமிழக முதல்வர். எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட கழகம் சார்பில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான பி.கே.வைரமுத்து தலைமையில் புரட்சி தலைவர். எம்.ஜி.ஆர் திருவுருவப்படத்துடன் அதிமுக நிர்வாகிகள் ஊர்வலம் வந்தனர்.அதனைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் அஇஅதிமுக கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி‌.ஆர் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை  செய்து இனிப்புகள் வழங்கியதோடு,நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவினர்.இந்நிகழ்வில் திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர். மணிகண்டன்,மாவட்ட துணை செயலாளர். சரசு மாரிமுத்து உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!