கம்பம் பகுதியில் சிறுத்தையா? பொதுமக்கள் பீதி!!
தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கட்டி வைத்திருந்த 20 கிலோ எடையுள்ள ஆடு உடல் சிதைந்த நிலையில் மீட்பு!
கம்பம் பகுதியில் மணிகட்டிய ஆலமரம் செல்லும் பாதையில், கம்பம் தங்க விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் மாட்டு கொட்டகையில்” கட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ எடையுள்ள ஆடு உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த வருடம் சிறுத்தை இருப்பதை கண்ட பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் ஒருவேளை சிறுத்தையாக இருக்கலாம் என அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அந்த பகுதியில் செந்நாய் மற்றும் நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதால், அவற்றின் தாக்குதலாக இருக்கலாம் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும், முழுமையான விவரங்கள் தொடர்ந்து நடைபெறும் ஆய்வின் பின்னர் தெரியவரும் என்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக