திருமயத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழா!!

 

புதுக்கோட்டைமாவட்டம்,திருமயத்தில் தமிழ் மன்றம் சார்பில் திருவள்ளுவர் தின விழா நேற்று நடந்தது.  விழாவுக்கு தமிழ்மன்றத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட தலைவர் பிரபு, பொறியாளர் ஆறுமுகம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். யோகா மைய பயிற்றுநர்   சிவகாமி வரவேற்றார். திருவள்ளுவரின் சிறப்புக்களையும், திருக்குறளின் கருத்துக்களையும் கணேசர் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை முத்து விளக்கிப்பேசினார். விழாவை முன்னிட்டு குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.  அதனை  மனவளக்கலை துறை பேராசிரியர்  முத்துக்குமரேசன் தொடங்கி வைத்தார்.அதில் பல்வேறு பள்ளிக்கூடங் களில் இருந்து 60 மாணவ,மாணவிகள்  பங்கேற்றனர்.போட்டி 3 பிரிவாக   நடத்தப்பட்டு இறுதியில் 9 பேர்  தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு திருமயம் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை  சத்யா பரிசு,சான்றிதழ்களை வழங்கிப்பேசினார். நிகழ்ச்சியில் தொழில் அதிபர் ஆறுமுகம்  தனது சொந்த நிதியில் திருக்குறள் ,அபிராமி அந்தாதி  புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்கினார்.
யோகா பயிற்றுநர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
படவிளக்கம்.திருமயம் தமிழ் மன்றத்தின் சார்பில் நடந்த குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு  தமிழ்த்துறை  பேராசிரியர்  சத்யா பரிசுகளை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!