வடலூர் நகராட்சியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!
கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வடலூர் நகர மன்ற தலைவர்.சு.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பாரம்பரிய முறைப்படி வேட்டி சேலை அணிந்தவாறு பன்னீர் கரும்புடன் பச்சரிசி வெள்ளம் முந்திரி ஆகிய பொருட்களைக் கொண்டு புது பானையில் பொங்களிட்டு தைத்திருநாளை பொங்கலோ பொங்கல் என்று கோஷம் எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.
மேலும் நகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் சுப்புராயலு திமுக வடலூர் நகர செயலாளர். தன.தமிழ்ச்செல்வன்மற்றும் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக