செந்துறையில் அடிப்படை வசதிகள் கோரி தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம், செந்துறை பிள்ளையார் நத்தம் குடகிப் பட்டி சிரங்காட்டுபட்டி  ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தக் கோரியும், பல்வேறு உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும் த.வெ.க சார்பில் செந்துறை பேருந்து நிறுத்தம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர். எஸ்.எம். நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நத்தம் வடக்குஒன்றிய செயலாளர். வீரராஜ் முன்னிலை வகிக்க ஒன்றிய இணை செயலாளர். தனராஜ் பொருளாளர். சசிகுமார் துணைச் செயலாளர். பனரோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் ஒன்றிய,நகர நிர்வாகிகள்,மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் செந்துறை பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், குட்டத்துப் பட்டிக்கு மயானசாலை அமைக்கவேண்டும், காமாட்சிபுரத்திற்கு சாலை வசதி , சரளை பட்டியில் நியாய விலை கடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு கோஷங்கள் எழுப்பி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!