விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ஆலங்குளத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்!!

விருதுநகர் மாவட்டம்,அதிமுக கழக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான தமிழக எதிர்கட்சி தலைவர்.மாண்புமிகு  எடப்பாடியார் அவர்களின் ஆணைகிணங்க,  

விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் ஆலங்குளம் TNC முக்கு ரோடு அருகே இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து இன்னுயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீரவணக்க நாள்  பொதுக்கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர்.SGS. வெற்றிவேல்(எ) விக்னேஷ் அவர்கள் வரவேற்பில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்.R.K.ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்ப அழைப்பாளர்களாக காட்டு மன்னார் கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கழக அமைப்பு செயலாளருமான N.முருகுமாறன் Ex-MLA ,சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளருமான MSR.ராஜவர்மன் Ex MLA,சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளருமான எதிர்கோட்டை S.G.சுப்பிரமணியன் Ex MLA ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் அதிமுக கழக இலக்கிய அணிதுணைசெயலாளர்,பேராவூரணி.K.திலீபன்,அதிமுக கழக இளம் பேச்சாளர்.S.சுபநிதி சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இதில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தலைமை கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள் நகர கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் மாவட்ட செயலாளர்கள் கிளை & வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சிகளின் இந்நாள் முன்னாள் கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், செயல்வீரர்கள்-வீராங்கனைகள், கழக முன்னோடிகள் மற்றும் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!