த. வெ.க மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் தலைமையில் நலத்திட்ட உதவி!!

தமிழக வெற்றி கழகத்தின் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் தலைமையில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றியம் தென்பளஞ்சி ஊராட்சி  பொது மக்களுக்கு   நலத்திட்ட உதவி வழங்கும்  விழா அவனியாபுரம் கிழக்கு 1  ஆம் பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சமூகத்தின் அடித்தளமாக இருந்து பொதுசுகாதாரத்தையும் தூய்மையையும் பாதுகாத்து வரும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட்டன.         விழாவில்  உரையாற்றிய மாவட்ட  செயலாளர் திருநகர் மருதுபாண்டியன் அவர்கள், “தூய்மை பணியாளர்கள்  நகரின் உயிர்நாடி போன்றவர்கள். அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மதிக்கப்பட வேண்டியவை. தமிழக வெற்றி கழகம் எப்போதும் மக்களுடன், மக்களுக்காக செயல்படும்” என தெரிவித்தார்.

மேலும், தமிழக வெற்றி கழகம்  பொதுமக்களின் நலன் கருதி தொடர்ந்து பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளை திருப்பரங்குன்றம் தொகுதி  முழுவதும் பல நலத்திட்ட உதவிகளை முன்னெடுத்து வருவதாகவும், அதில் ஒரு பகுதியாக  இந்த நலத்திட்ட  உதவி வழங்கும்  விழா நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகம் திருப்பரங்குன்றம் தொகுதியில்  சேவை அரசியலின் புதிய அடையாளமாக உருவெடுத்து  வருகிறது.32 ஊராட்சிகளிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் தொடர் பணிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

அதன்  தொடர்ச்சியாக ஐந்தாவது ஊராட்சியில் பல்வேறு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இவை வெறும்  உதவிகள் அல்ல, மக்களின் வாழ்க்கையை   மாற்றும் முயற்சிகள்.ஒவ்வொரு ஊராட்சியிலும் நேரடியாக மக்களை சந்தித்து   செயல்படும் அரசியல்  நடைமுறை வலுப்பெற்று  வருகிறது.பேச்சை விட செயலில் அரசியல் செய்யும் கட்சியாக உருவாகியுள்ளது த. வெ.க.

திருப்பரங்குன்றம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் நம்பிக்கையை விதைக்கின்றன.மக்கள் மனங்களில் இந்த இயக்கம் வலுவான செல்வாக்கை பெற்றுள்ளது.

சேவையில்  உச்சம்,செயல்பாடுகளில் உச்சம் திருப்பரங்குன்றம் தொகுதி அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் முன்னுதாரணமாக பேசப்படுகிறது.

 நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள்,  ஊராட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களை உற்சாகப்படுத்தினர். விழாவின்  முடிவில் தூய்மை பணியாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின்  இந்த மனிதநேய நடவடிக்கையை  மனதார பாராட்டினர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!