தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஸ்டெம் பொங்கல் கொண்டாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், திருமால்பூர் கிராமத்தில் யுனிசெப் மாநில ஒருங்கிணைப்பாளர். அ.அரவிந்த்தலைமையில் ஒன்றியத் தலைவர். கே.சுரேந்திரநாத் , ஒன்றிய செயலாளர். இரா.சேதுராஜ், செயற்குழு உறுப்பினர். ந.கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர். இரா.ஆலிஸ்மேரி ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஸ்டெம் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பேராசிரியர். அ.கலைநேசன் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். யுனிசெப் மாநில அலுவலர். அகிலா ராதாகிருஷ்ணன் மாநில கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ந.மாதவன், முன்னாள் மாநிலபொதுச்செயலாளர். சா.சுப்பிரமணி, நல்லாசிரியர் த.வெண்ணிலா, சிவகாமி, கருத்தாளர்கள் காஞ்சி.லித்தியம், வேலூர்.ரவீந்திரன், உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர். க.பழனிவேல் நன்றியுரை வழங்கினார்.மாணவ மாணவியர்களுக்கான அறிவியல் பார்வை கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் அறிவியல் விளையாட்டுகள் நடைபெற்றது. அனைவருக்கும் பரிசுகள், சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக