கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!
கடலூர் மாவட்டம்,தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . S. ஜெயக்குமார் IPS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.
பொங்கல் வைத்தும் "பொங்கலோ பொங்கல்" என கூறி பொங்கல் பண்டிகை கொண்டாடினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். விளையாட்டு போட்டிகள் வைத்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் N. கோடீஸ்வரன், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள். ரகுபதி, அப்பாண்டைராஜ் காவல்துறை நிர்வாக அலுவலர்கள் . சிவகுமார், வேல்முருகன், ரங்கநாதன், மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக