நூலகத்தினை அதிகம் பயன்படுத்திய மாணவனுக்கு பரிசு!!
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை நூலகத்தில் போட்டி தேர்வு பகுதியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.500/ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் டிசம்பர் 25 மாதம் நூலகத்தினை அதிகம் பயன் படுத்திய மாணவர். பத்மநாபன் அவர்களுக்கு தெய்வத் திருவாளர்கள். சௌந்தரபாண்டியன் - பத்மாவதி அவர்களின் நினைவாக இன்சூரன்ஸ் S.பால்ராஜ் ஐயா அவர்கள் ரூ.500/- இன்று 12.01.26 வழங்கி வாழ்த்தினார்கள்.இந்நிகழ்வில் வழக்கறிஞர் G.K. மணிகார்திக் வடகரை வாசகர் வட்ட தலைவர் மற்றும் நூலக ஆர்வலர் மு. அன்புக்காரன் தென்கரை வாசகர் வட்ட தலைவர் மற்றும் நூலகர்கள் பா. காளீஸ்வரி , சி.குமரன் மற்றும் போட்டி தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக