அமைச்சர். ஆர். காந்தி தலைமையில் நடைபெற்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்!!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வரும் ஜனவரி 29 அன்று கோயம்புத்தூர் கொடிசியா வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள, சர்வதேச ஜவுளித் தொழில் மாநாடு 360 (International Textile Summit 360) யினை துவக்கி வைப்பதை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று (24.01.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர். காந்தி அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை, அரசு செயலாளர், வே. அமுதவல்லி, இ.ஆ.ப., கைத்தறி துறை இயக்குநர். மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., துணிநூல் துறை ஆணையர் இரா. லலிதா, இ.ஆ.ப., கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர், கவிதா ராமு, இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்


கருத்துகள்
கருத்துரையிடுக