இரவு நேரங்களில் வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அறிவுரை!!

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வந்து செல்கின்றனர். தற்போது தைப்பூச திருவிழா விரைவில் வர உள்ள நிலையில் வெளியூரிலிருந்து அதிகப்படியான பக்தர்கள் இரவு பகல் பாராமல் பாதயாத்திரை வருகை தருகின்றனர் இரவு நேரம் பக்தர்கள் சாலையில் நடந்து செல்வதால் விபத்து போன்ற அசம்பாவித செயல்கள் ஏற்படாமல் தடுக்க மாவட்ட எஸ்.பி. பிரதீப் அவர்களின் உத்தரவின்படி பழனி டிஎஸ்பி திரு தனஞ்செயன் அவர்களின் அறிவுறுத்தலின் படி போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர். கவிதா மற்றும் காவலர். கார்த்தியாயினி இரவு நேரங்களில் பாதயாத்திரை வருவதை தவிர்க்குமாறும் இரவு நேரங்களில் பாதயாத்திரை செல்லும் பொழுது கையில் ஒளிரும் குச்சிகள் வைத்துக் கொள்ளுமாறும் ரிஃப்ளக்க்ஷன் ஸ்டிக்கர் பயன்படுத்துமாறும் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கி பக்தர்களை வழி நடத்தினார்கள்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!