தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சக்கம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோவில் வழிபாடு . கும்பாபிஷேகம் முடிந்து 48 வது நாள் பூஜை விழா சிறப்பாக நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கள் பகுதியில் நேற்று கெங்கை அம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது அம்மனுக்கு மாலை அணிவிப்பதில் இரு கோஷ்டிகளிலேயே இடையே தகராறு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து இன்று காலை ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்கியதாக கூறப்படும் நிலையில் இதில் சிலர் காயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கூறி குடியாத்தம்- பேரணாம்பட்டு சாலையில் சாலை மறியல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் தாலுகா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது. குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் .சு.ரவி MLA தொகுதி மக்களுக்கான கோரிக்கை மனுவை அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர். ம.தனபால் மத்திய ரயில்வே அமைச்சர். ஸ்ரீ. அஷ்வினி வைஷ்ணவ்வை நேரில் சந்தித்து, கொடுத்தார்.அதில் கேட்டு கொண்டது.. அரக்கோணம் சந்திப்பு இரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் முக்கிய இரயில் வண்டிகளை நிற்க்க வைக்க வேண்டும் மின்சார ரயில் சோளிங்கர் வரை நீட்டிக்க வேண்டும், அரக்கோணம் இரயில்வே மருத்துவமனையில் டயாலிஸ் பிரிவு அமைத்திட வேண்டியும் இச்சிபுத்தூர் இரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டுமெனவும், கூடுதலாக நடைமேடை அமைக்க வேண்டும் அரக்கோணம் பழனிப்பேட்டையில் உள்ள இரட்டை கண் சுரங்க பாதையை அகல படுத்த வேண்டும் அல்லது உயர்ந்தபட வேண்டும்., அப்படி இல்லையென்றால் இரயில்வே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் எனவும் மோசூர் அருகே இரயில்வே சுரங்கப் பாதை அமைத்திட வேண்டியும் கொரோனா கால கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட இரயில் வண்டிகளை இயக்க கோரியும் மத்திய இரயில்வே அமைச்சரிடம் கொடுத்த மனுவில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. அரக்கோணம் செய...
மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் எவ்வித சிக்னலும் இல்லாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அசுர வேகத்தில் வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் உயிர் இழந்தார். டிவலையாங்குளம் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் வடிவேலு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க அப்பகுதியில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.
கருத்துகள்
கருத்துரையிடுக