தமிழகத்தில் முதல் தற்சார்பு பசுமை ஆற்றல் காவல் நிலையம்!!
தேனி மாவட்டத்தில் க. விளக்கில் தமிழகத்தில் முதன்முறையாக தற்சார்பு பசுமை ஆற்றல் காவல் நிலையம்
சுற்றுச்சூழல் மாசுபடுத்தா வண்ணம் பசுமை காவல் நிலையத்தை திறந்து வைத்த திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் தேனி மாவட்டம், க.விலக்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு சன் பெஸ்ட் சோலார் தனியார் நிறுவனத்துடன் இணைந்து மின் சேமிப்பு மற்றும் மாசு குறைப்பு இயற்கைக்கு நன்மை செய்யும் முயற்சியில் முன்னெடுப்பில் பசுமை ஆற்றல் காவல் நிலையத்தை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர். Dr.P.சுவாமிநாதன்,இ.கா.ப., அவர்கள் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். Dr.B.சினேஹாப்ரியா,இ.கா.ப., அவர்கள் தலைமையேற்று திறந்து வைத்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக