மதுரையில் போஸ்டர் யுத்தம்!!

'மதுரை வடக்கு தொகுதி காங்.,' என்ற பெயரில், தொகுதி முழுவதும் 'காங்., வேட்பாளருக்கு ஓட்டளியுங்கள்' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தி.மு.க.,வினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

மதுரை நகர் காங்., தலைவர். நல்லமணி கூறுகையில், "இந்த போஸ்டருக்கும் நகர் காங்கிரசுக்கும் தொடர்பில்லை" என்றார்.

தி.மு.க.,வினர் கூறியதாவது: காங்கிரசை தளபதி எம்.எல்.ஏ., விமர்சித்த விவகாரத்தில் கட்சி கட்டுப்பாட்டை மதித்து தி.மு.க.,வினர் அமைதி காக்கின்றனர். ஆனால் எங்களை உசுப்பேத்தும் வகையில் காங்கிரசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தளபதி வீட்டை இளைஞர் காங்., முற்றுகையிடுவர் என ஏற்கனவே மாணிக்கம் தாகூர் கூறியிருந்தார். அவரது ஆதரவாளர்களே இந்த விஷமத்தன போஸ்டர்களை ஒட்டியிருக்கலாம். இது தொடர்ந்தால் தி.மு.க., சும்மா இருக்காது என்றனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!