தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு!!
தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (ஜன.08) தொடங்கிவைக்கிறார்!
2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்பஅட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில்வசிக்கும்குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக