திருமயத்தில் விளையாட்டு உபகரணங்கள் . அமைச்சர் வழங்கினார்!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயத்திற்கு நேற்று அமைச்சர். ரகுபதி வந்தார்.எம்.எல்.ஏ அலுவலகத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
அலுவலக வளாகத்தில் மகளிர் அணியினர் சர்க்கரைப்பொங்கலிட்டனர். பிறகு அமைச்சர் ரகுபதி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைக்கூறி னார்.பின்னர் அவர் திருமயம் அதன் சுற்று வட்டார கிராமங்களைச்சேர்ந்த இளைஞர்களுக்கு வாலிபால்,கிரிக்கெட்,கால் பந்து,கேரம்,செஸ்,டென்னிஸ், செட்டில் போன்ற விளையாட்டுக்களின் உபகரணங்களை 25 குழுக்களுக்கு இலவசமாக வழங்கினார். இதன்மதிப்பு ரூ3 லட்சமாகும்.
நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர். ஆறு.சிதம்பரம், முன்னாள் ஒன்றிய செயலாளர். ஆர்.எம்.கருப்பையா,முன்னாள் சேர்மன் சுப.துரைராஜா ,முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் சிக்கந்தர்,பாலசுப்பிரமணியன்,திமுக பொருளாளர். வேங்கையரசன்,மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர். ராமசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக விளையாட்டுப்பிரிவு அமைப்பாளர் நீலமேகம் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக