சோளிங்கர் அருகே நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கால் நூற்றாண்டு நிறைவு விழா!!
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அரக்கோணம் ஒன்றியம், பாராஞ்சி கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடங்கி 25ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாய் கால்நூற்றாண்டு விழா கைப்பந்து போட்டி நடத்தி, மக்களுக்கு வேட்டி சேலை வழங்கியும் மாணவ, மாணவியருக்கு பரிசளித்தும் சிறப்பித்தனர்.
நிகழ்வில் மாவட்டச் செயலாளர். இரத்தின. நற்குமரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழப்பாளர்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர். இளம்சேகுவேரா, மண்டல செயலாளர். வழ. ந. தமிழ்மாறன் மண்டல துணைச் செயலாளர். அ. கோ. வெற்றிவளவன் பங்கேற்றனர் அனவரையும் வரவேற்று ஒன்றிய செயலாளர் பாக்கியராஜ் உரையாற்றினார். நிழ்வை முகாம் நிர்வாகிகள் தமிழ்நாதன், வல்லரசு, இளம்பொழியன், தமிழரசன், பிரேம்குமார். ஆகியோர் ஏற்பாடு செய்தனர். 100இக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதியில் பா. சங்கீதராஜ் நன்றி நவின்றார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக