திருப்பரங்குன்றம் மலைமீது தர்கா தரப்பில் ஏற்றப்பட்டிருந்த கொடி அகற்றம்!!

வருவாய்த்துறை கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர்  நடவடிக்கை:

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவின் சந்தனக்கூடு விழாவையொட்டி கடந்த மாதம் 21ஆம் தேதி மலையில் தர்காவிற்கு அருகில் இருக்கும் கல்லத்தி மரத்தில் பிறை சின்னம் கொண்ட கொடி ஏ ற்றப்பட்டது.

இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இந்த கொடி தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் வருவாய் துறை அறநிலையத்துறை மற்றும் காவல் துறையினர் சேர்ந்து  கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை அகற்றி உள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!