ஆலங்குடியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கையுந்து போட்டி அமைச்சர் மெய்யநாதன் பரிசு வழங்கினார்!!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம்  ஆலங்குடி பேரூர் கழகம் சார்பில் தமிழக முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க துணை முதலமைச்சர் விளையாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலுடன் திராவிடப் பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொட்டாட்டத்தை முன்னிட்டு ஆலங்குடி நகரக் கழகத்தின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் கையுந்து போட்டி  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடலில் நடைபெற்றது. மாணவர்களுக்கான போட்டியில் முதல் பரிசு. ரூ. 5 ஆயிரம் மறமடக்கி பள்ளி மாணவர்களும், இரண்டாம் பரிசு. ரூ.3 ஆயிரம், வடகாடு பள்ளியும், மூன்றாம் பரிசு. ரூ 2 ஆயிரம், ஆலங்குடி மார்டன் பள்ளியும், நான்காம் பரிசு. ரூ. ஆயிரம், குளமங்களம் பள்ளியும் பெற்றனர். பெண்களுக்கான போட்டியில் முதல் பரிசு கொத்தமங்கலம் பள்ளியும், இரண்டாம் பரிசு வடகாடு பள்ளி மாணவிகளும் மூன்றாம் பரிசு குளமங்களம் பள்ளியும், நான்காம் பரிசு மார்டன் பள்ளி மாணவிகளும் பரிசு பெற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தமிழ் நாடு பிற்றடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் பரிசு வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர். தங்கமணி,  பேரூராட்சி தலைவர் ராசி. முருகானந்தம், நகர செயலாளர். பழனிக்குமார், துணைச் செயலாளர். எஸ்.வி. டி. என்ற செங்கோல், அரசு வழக்கறிஞர். கண்ணதாசன், பள்ளி தலைமை ஆசிரியர். தியகராஜ்,  ஆர். வீ.செல்வம் கிருஷ்ணமூர்த்தி,  கவுன்சிலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!