பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழி ஏற்பு!!
கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் படி பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 25 தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர். திருமாவளவன் அவர்கள் தலைமை வகித்தார்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர். பி.ஹேமலதா, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர். வீ. லோகநாதன்,ஆசிரியர்.பாபு, குமார் ,ஆசிரியர் செயலர். ரத்தினபிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.
தேசிய மாணவர் படை ராஜா ஆ நோக்க உரையாற்றினார்.பள்ளி உதவி தலைமை ஆசிரியர் . ஆர் மாலதி அவர்கள் தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழி வாசிக்க ஆசிரியர்களும் மாணவர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுனர் . புவனேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக