இலுப்பூர் மதர் தெரசா கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற புத்தாண்டு விருது வழங்கும் விழா!!

புதுக்கோட்டை மாவட்டம்,இலுப்பூர் மேட்டு சாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்களில் புத்தாண்டு மற்றும் ஆசிரிய அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் முனைவர். இரா. சின்னதம்பி தலைமை தாங்கி புத்தாண்டு வாழ்த்து வழங்கினார்.தாளாளர். இரா.சி. உதயக்குமார்  முன்னிலை வகித்துவாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக  மதர்தெரசா கல்விஅறகட்டளை உறுப்பினர்ரம்யா விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரை பேசுகையில்குழந்தைக்கு தாலாட்டு எவ்வளவுமுக்கியமோ அதே அளவிற்கு நிறுவனத்தில் சிறப்பாக பணி செய்பவர்களுக்குபாராட்டும் விருதும் முக்கியம் எனவும் தற்போது விருது பெறுபவர்களை போல விருது பெறாதவர்கள்தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் கடமையை செய்து அடுத்த விழாவில் விருதுகளை பெற வேண்டும் என பேசினார்கள்.

விழாவில் கல்வி நிறுவனத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கும் , விடுப்பு யின்றிஅதிக வருகை பதிவு , சிறந்த ஒட்டுநர் விருது , கடந்த ஆண்டுகளில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கான விருது , அதிக மாணவர்களை சேர்க்கை செய்த கல்லூரி விருது ,

கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் ,கூடுதல் பாடபிரிவுகள் விருதுஎன சிறப்பிடம் பெற்ற ஆசிரிய அலுவலர்களுக்குபதகங்கள் , சீல்டு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் மதர்தெரசா கல்வி நிறுவனங்களின் சார்பில் அதிக அளவு மரங்களை விதைத்து  கொண்டே இருக்கும் விதைக்கலாம் அமைப்பிற்குமரம் தரும் விருதும்உயிர்காக்கும் உன்னதபணி இரத்ததான கொடையளித்து வரும் CVB குருதி பாசறைக்குகுருதி கொடை வள்ளல் விருதும் விராலிமலை மயில்கள் அறகட்டளைக்கு உழவார பணிகளை சிறப்பாக செய்து வருவதற்காக மாராயம் உழவார படை விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முன்னதாக நிகழ்விற்கு வந்த அனைவரையும் கல்வி நிறுவனங்களின் பதிவாளர். மு. தினேஷ் குமார் வரவேற்றார்.இயக்குநர். திருமா பூங்குன்றன் வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் அம்மா கண்ணு அம்மா , சிவலதா செல்வி அன்னன்யா விஜயபாஸ்கர செல்வன் விஜய அரசன் மற்றும் கல்வி நிறுவன முதல்வர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியை பேராசிரியர். ரவிகுமார், மேரி,மகாலெட்சுமிஆகியோர்தொகுத்துவழங்கினார்கள்.நிகழ்ச்சிகானஏற்பாடுகளைகல்லூரி வளர்ச்சி பிரிவு அதிகாரி. நிஷிதா உதயக்குமார் தலைமையில் பி.ஆர்.ஒ வித்யா , பாலாஜி, மணிமேகலை,சென்பகம்,ராஜேஷ் உள்ளிட்ட தலைமை அலுவலக அலுவலர்கள் செய்திருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!