தமிழ்நாட்டில் முதல் முறையாக ”A.I”. கிளாஸ் ரூம் சான்றிதழ் படிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அபார வெற்றி!!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாட்டு பள்ளிகள் வரலாற்றில் முதன்முறையாக  ”A.I” கிளாஸ்ரூம்” சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.    ஸ்ரீ வெங்கடேஸ்வரா  மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் இயக்குனர் ரா.சுதர்சன் வழிகாட்டுதலின்படி   ஜியோ நிறுவனத்தால்  நான்கு வாரங்கள் ”A.I” கிளாஸ் ரூம்” சான்றிதழ் பயிற்சி   வகுப்பு நடத்தப்பட்டது.   இந்த திட்டம் ஆசிரியர்களுக்கு  நவீன முறையில் பாடத்திட்டங்களை வடிவமைக்கவும், மாணவர்களுக்கு வருங்கால வேலை வாய்ப்பிற்கு தேவையான  தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் சிறந்த பாலமாக அமையும் படி செயல்படுத்தப்படுகிறது.  பள்ளி மாணவர்களின் கல்வித்தரம்  இதன்மூலம் அடுத்த கட்டத்துக்கு உயரும் என்ற நம்பிக்கையோடு  ”A.I”கிளாஸ் ரூம் பயிற்சி வகுப்பில் பள்ளியின் 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் 20க்கும் மேற்பட்ட    ஆசிரியர்களும்  கலந்து கொண்டு  பல்வேறு அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி  செய்முறைகள்  ”A.I”உதவியுடன் மேற்கொண்டனர்.  தமிழ்நாட்டு பள்ளிகளில்  முதன் முறையாக நான்கு வார ”A.I” கிளாஸ் ரூம்” பயிற்சி  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படுவது பயனுள்ளதாக அமைந்ததாக பெற்றோர்கள் பெரிதும் பாராட்டினர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!