பிப்ரவரி 9 முதல் தொடர் விடுப்பு போராட்டம் தேனி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்க முடிவு என அறிக்கை !!

தேனி மாவட்டம், ஆண்டி பட்டியில் தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வலியுறுத்தி வரும் பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் நடைபெற உள்ள மாநில அளவிலான தொடர் விடுப்பு போராட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஊராட்சி செயலாளர்களும் முழுமையாக பங்கேற்க உள்ளனர் இது குறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர். பெ. பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி செயலார்கள் கடந்த ஜனவரி 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னையில் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட உறுதி மொழியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது; ஆனால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு பல நாட்களாகியும் இதுவரை கோரிக்கைகள் தொடர்பான அரசாணை வெளியிடப்படவில்லை இதனால் வரும் பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் தமிழக அரசு உரிய அரசாணையை வெளியிடாவிட்டால் பிப்ரவரி ஒன்பதாம் தேதி முதல் மீண்டும் சென்னையில் தங்கியிருந்து மாநில அளவில் தொடர் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது இந்தப் போராட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளர்களும் முழுமையாக பங்கேற்பது என சங்கத்தின் சார்பில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!