திண்டுக்கல் அருகே பழிக்கு பழியாக கணவன் - மனைவியை இரு வெவ்வேறு இடங்களில் வெட்டி படுகொலை - 8 பேர் கைது!!

ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை தட்டி தூக்கிய மாவட்ட எஸ்.பி.பிரதீப்

திண்டுக்கல் யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ்(41) இவர் கடந்த 2024-ம் ஆண்டு  அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரான மாயாண்டிஜோசப் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி.

இந்நிலையில் நேற்று நத்தம் ரோடு R.M.T.C.காலனி அருகே சேசுராஜ் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மர்ம கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

அதே நேரத்தில் சேசுராஜின் 2-வது மனைவி தீபிகா(35) யாகப்பன்பட்டியில் வீட்டின் வாசலில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் நேரடி நடவடிக்கையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீசார் இது தொடர்பாக ஞானராஜ், தர்மர், அருள், ஜான்பீட்டர் (எ) காற்று உள்ளிட்ட 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!