குமராபுரம், கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் நடைபெற்ற 77வது குடியரசு தினம் விழா!!
கடலூர் மாவட்டம்,நெல்லிக்குப்பத்தை அடுத்த குமராபுரம் பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் நடைபெற்ற மனித நேயமிக்க 77வது குடியரசு தின விழா காவல் துணை கண்காணிப்பாளர். மனிஷா அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், குமராபுரம் கிருஷ்ண சாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் 77வது குடியரசு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல் துணை கண்காணிப்பாளர் மனிஷா அர்ஜுனன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் மருத்துவர். ராஜேந்திரன் ,
செயலாளர். விஜயகுமார், முதல்வர் மருத்துவர். இளங்கோ, மற்றும் நிர்வாக அலுவலர். பாலகிருஷ்ணன் , இந்து அமைப்பின் சார்பில் பாஸ்கர்,பாதிரியார் ஜான் தாஸ், இஸ்லாமிய அமைப்பின் சார்பில் அலி உசேன் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேற்படி நிகழ்ச்சியில் கல்லூரியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் அனைவருக்கும் சால்வை அணிவித்து காவல் துணை கண்காணிப்பாளர். மனிஷா அர்ஜுனன் தனது அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக