ராணிப்பேட்டையில் நாட்டின் 77வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 32 பயனாளிகளுக்கு 1.16 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார்.
இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைப்பெற்ற நாட்டின் 77 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ..யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.
பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 32 பயனாளிகளுக்கு ரூ. 1.16 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்!பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட 316 நபர்களுக்கும், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 59 காவலர்களுக்கும்பாராட்டுச்சான்றிதழ்!32 காவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு. இந்திய நாட்டின் 77 வது குடியரசு தினத்தையொட்டி இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைப்பெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் இன்று 26.01.2026 தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்து திறந்தவெளி வாகனத்தில் சென்று காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள்.
முன்னதாக இராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
பின்னர் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 316 அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கும், மாவட்டத்தில் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 59 காவலர்களுக்கும் என மொத்தம் 375 அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும், காவல்துறையில் முதலமைச்சரின் காவலர் பதக்கங்கள் 32 காவலர்களுக்கும் வழங்கி கௌரவித்தார்கள்.
தொடர்ந்து ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, இராணிப்பேட்டை எல்.எப்.சி பெண்கள் நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, இராணிப்பேட்டைVRV பெண்கள் நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, வாலாஜாபேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா மேட்ரிக் உயர்நிலைப் பள்ளி, ஆற்காடு ஜிவிசி நிதியுதவி மேல்நிலைப்பள்ளி, பெல் இராமகிருஷ்ணா நிதியுதவி மேல்நிலைப் பள்ளி, சோளிங்கர் ஸ்ரீ திவ்ய சைதன்யா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியர்களின் பரதநாட்டியம், தேசியப்பாடல், தமிழரின் பெருமைப்பாடல், சிலம்பம், நாட்டுபுறப்பாடல், கிராமிய கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்கள். பின்னர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.1.18 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.6690/- மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 4 பயனாளிக்கு ரூ.35,124/- மதிப்பீட்டிலும், ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் 1 0 பயனாளிகளுக்கு ரூ.25,000/- மதிப்பீட்டிலும், வேளாண்மைத் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டிலும் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ-2.12 இலட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.75,000/- மதிப்பீட்டிலும், வேலைவாய்ப்புத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.36,000/- மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில வாழ்வாதா இயக்கம் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.80 இலட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.28.88 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தமாக 32 பயனாளிகளுக்கு ரூ.1.16 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன்ஜமால் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ந.செ.சரண்யாதேவி, நேர்முக உதவியாளர் (பொது) இராஜராஜன். வருவாய் கோட்டாட்சியர்கள் ராஜி,ரமேஷ், துணை ஆட்சியர்கள். கீதாலட்சுமி, ஏகாம்பரம், அறிவுடையநம்பி, மீனா, முதன்மை கல்வி அலுவலர் மோகனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர். குணசேகரன், அலுவலக பொது மேலாளர். ஜெய்குமார், வட்டாட்சியர்.ஆனந்தன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் காவலர்கள் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக