குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 600 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்!!
ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டையில் வருகிற 26 -02-2026 அன்று நாட்டின் 77வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். அய்மன் ஜமால் IPS அவர்கள் உத்தரையின் பேரில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா அவர்கள் ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தேசியக்கொடி ஏற்ற உள்ளார். இதனையொட்டி மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்கவும் முக்கிய நிறுவனங்கள் தேசிய தலைவர்களின் சிலைகள் ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முக்கிய இடங்களில் நாச வேலை தடுப்பு குழுவினர் (ANTI-SABOTAGE TEAM ) மூலம் சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டு முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் மூலம் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 1. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 4 . துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக