திண்டுக்கல் அருகே அரிசி அரவை மில்லில் ரேஷன் அரிசி பதுக்கிய 6 பேர் கைது - 40 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, மினி லாரி பறிமுதல் - அரிசி அரவை மில்லுக்கு சீல்!!


திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி காமாட்சிபுரம் பகுதியில் தனியார் அரிசி அரவை மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து தனியார் அரவை மில்லில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டபோது ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது

இதனையடுத்து தனிப்படை போலீசார் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த பல்லடம்-தை சோ்ந்த பிரசாத்குமாா் (32), கரூரைச் சோ்ந்த ராம்குமாா்(26), ராமநாதபுரத்தை சேர்ந்த சந்திரசேகா்(53), சவேரியாா்பாளையம் பகுதியைச் சோ்ந்த சின்ராசு (20),அஜய் (27), அய்யலூரை சோ்ந்த சுப்பிரமணி (58) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 40 ஆயிரம் கிலோ ரேஷன், அரிசி மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அரிசி மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!