கீழ்விசாரம் பாலமுருகன் கோவிலில் தெப்ப உற்சவம்: 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்!!


ஆற்காடு அடுத்த கீழ்விசாரம் ராசாத்திபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு கோலாகலமாக தெப்ப உற்சவ விழா நடைபெற்றது.  காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த விழாவில், காலை 7.00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 8.00 மணிக்கு உற்சவர் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி பவனி வரும் தெப்ப உற்சவம், கண்கவர் வானவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவை ராசாத்திபுரம் கிராம விழாக்குழுவினர் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!