சிபிஐ விசாரணைக்கு விஜய் பயணம்: ₹50 லட்சம் விமான செலவாம்!!...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்காக தவெக தலைவர். விஜய் நேற்று தனியார் சொகுசு விமானத்தில் டெல்லி சென்று, இன்று சென்னை திரும்பினார்.
விஜய் பயணம் செய்தது ‘Fly SPS’ நிறுவனத்தின் Embraer Legacy 600 ரக சொகுசு ஜெட். இதில் 13 பேர் வரை பயணம் செய்யலாம்.
ஒரே முறையில் 5,500 கி.மீ. பறக்கும் திறன், 41,000 அடி உயரம் வரை பறக்கும் வசதி, சோபா இருக்கைகள் போன்ற உயர் தர வசதிகள் இதில் உள்ளன.
இந்த ஜெட்டின் ஒரு மணி நேர வாடகை ₹2.5 - ₹5 லட்சம். டெல்லி - சென்னை பயணத்திற்கு மட்டும் சுமார் ₹50 லட்சம் செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக