பொங்கலுக்கு ரூ.3000 ரொக்க உதவி – திட்டக்குடியில் அமைச்சர்.சி.வெ. கணேசன் வழங்கல்!!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க உதவி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழுதூர் மற்றும் அரியநாச்சி ஊராட்சிகளில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர். சி.வெ.கணேசன் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3000 ரொக்க உதவியை இன்று தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில்:
1 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு, வேட்டி, சேலை மற்றும் ரூ.3000 ரொக்க உதவி ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் புன்னியகோடி, கூட்டுறவு துணை பதிவாளர். சபிதா, I.I.566 கழுதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர். மாரிமுத்து, வட்டாட்சியர். உதயக்குமார், பிடிஓ சண்முகசிகாமணி, டி எஸ் ஓ புஷ்பராஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக