தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் 3000 ரூபாய் வழங்கப்படுகிறது!!

தமிழகத்தில்  2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கடந்த 8-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. இதனை நாளை வரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த நிலையில் முதியவர்களுக்கு சரியாக கைரேகை பதிவு செய்ய முடியாததால் பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது கண் கருவிழி பதிவு மூலமாகவே பொங்கல் பரிசு தொகையை வழங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கைரேகை சரியாக பதிவு செய்யாத பட்சத்தில் கண் கருவிழி பதிவு மூலம் பொங்கல் பரிசு தொகுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!