27 வகையான பாரம்பரிய அரிசியை வைத்து நடைபெற்ற பொங்கல் விழா!!

CMA செ ராஜீவ் மாநில ஒருங்கிணைப்பாளர்.தமிழ்நாடு நெல். ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்;கும்பகோணத்தில், சோழ மண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பு சார்பாக 27 வகையான பாரம்பரிய அரிசிகளை கொண்டு பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது....

  பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழாவை ஒருங்கிணைத்த இந்த கூட்டமைப்புக்கு நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் சார்பாக 

      மேலும் தமிழக முழுவதும் பல கல்லூரிகளில் பள்ளிகளில் பொங்கல் விழா நடைபெற்றாலும் 27 வகையான பாரம்பரிய அரிசிகளை கொண்டு பள்ளிகளில் பொங்கல் விழா நடத்திய முதல் கூட்டமைப்பு என்ற பெருமையையும் பெற்றுள்ளது .மகிழ்ச்சி அளிக்கிறது....

       பொங்கல் விழா என்பது ஒரு மதத்திற்கான விழாவே கிடையாது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று..... குறிப்பாக இந்த தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை.....

       இது உழவர்களின் திருநாள் தாங்கள் அறுவடை செய்த முதல் நெல்லை தாங்கள் பயன்படுத்துவதற்கு முன்பாக இயற்கைக்கு வழிபாடு செய்யும் விதமாக தொன்று தொட்டு நமது முன்னோர்கள் செய்யும் ஒரு அற்புதமான நிகழ்வு தான் நமது உழவர் திருவிழா......

         வாழ்க விவசாயம் வளர்க உழவர்கள்.......

CMA செ ராஜீவ் மாநில ஒருங்கிணைப்பாளர்.தமிழ்நாடு நெல். ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் பெருமிதம்!

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!