ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை - கணக்கில் வராத 25,000 ரொக்கம் மற்றும் 3 கிராம் தங்க நாணயங்கள் பறிமுதல்!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குனர்(PD) சரண்யா தேவி என்பவரின் அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 

புத்தாண்டு பிறப்பை ஒட்டி பரிசு பொருட்கள் பெறுவதாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆய்வு குழு தலைவர் கோட்டீஸ்வரன் என்பவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 25,000 ரூபாய் ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரி, 15 சர்ட், பேண்ட் துணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!