விழுப்புரம் மாவட்டத்தின் 25 ஆவது காவல் கண்காணிப்பாளர் இன்று பொறுப்பேற்பு!!
விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று V.V.சாய் பிரனீத்,IPS., பொறுப்பேற்றுக் கொண்டார்.2018 ஆம் ஆண்டு IPS பணியில் சேர்ந்த இவர் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுரை மாநகர துணை ஆணையர் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள் போதைப்பொருள் (கஞ்சா & குட்கா, குறிப்பாக பள்ளிகள்/கல்லூரிகள் அருகே போதைப் பொருள்கள் கிடைப்பதற்கு எதிரான நடவடிக்கை,
GST மற்றும் ECR போன்ற நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைக் குறைத்தல்,
எந்தவிதமான ரவுடித்தனங்கள் அல்லது கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல்,
குற்றங்களை உடனுக்குடன் கண்டறிதல் மற்றும் வழக்குகளைச் சரியான நேரத்தில் விசாரித்தல்,காவல் துறையினரின் நலன்,பொதுமக்களிடம்காவல்துறையினரின் மனிதாபிமான நடத்தையை மேம்படுத்துவது மற்றும் பொதுமக்களின் குறைகளுக்குச் சரியான நேரத்தில் தீர்வு காண்பது.
விழுப்புரம் செய்தியாளர் விஜய்.

கருத்துகள்
கருத்துரையிடுக