திட்டக்குடியில் ரூ.23.95 கோடி மதிப்பீட்டில் புதிய 110/33-11KV துணை மின் நிலையம் – அமைச்சர் சி.வெ.கணேசன் அடிக்கல் நாட்டினார்!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் மின்வாரிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள துணை மின் நிலையம், திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் மின் திறன் குறைவாக இருந்தது. இதனால் அடிக்கடி மின் தடங்கல் ஏற்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள் மின் திறன் உயர்த்த கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று, மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர். சி.வெ.கணேசன் அவர்களின் சிறப்பான முயற்சியால், ரூ. 23.95 கோடி மதிப்பீட்டில் செயல்பட்டு வந்த 33/11KV துணை மின் நிலையத்தை, அதிக குதிரை திறன் கொண்ட 110/33-11KV துணை மின் நிலையமாக தரம் உயர்த்தும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மின்வாரிய உயர் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலர், மங்களூர் கிழக்கு ஒன்றிய செயலாளர். பட்டூர் அமிர்தலிங்கம், நகரச் செயலாளர். வி.பி.பி. பரமகுரு, கழக நிர்வாகிகள், மின்வாரிய பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் திட்டக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் திறன் அதிகரித்து, தொழில் வளர்ச்சிக்கும் பொதுமக்களின் மின்சார தேவைக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக