நத்தம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டம்!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஒன்றியம் பரளி - புதூர் ஊராட்சி பரளியில் கிராமசபைக் கூட்டம் நடந்தது. இதற்கு நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மற்றும் தனி அலுவலருமான ரவிந்திரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் சச்சிதானந்தம் உறுப்பினர்களுடன் விவாதத்தில் கலந்து கொண்டார். பற்றாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக் குமார் செயல்பட்டார். ஊராட்சி செயலர் அன்புச் செல்வம் அறிக்கை வாசித்தார். இதில் குடி தண்ணீரின் கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பரளி - தேத்தாம் பட்டியிலும், பரளியிலும் புதிதாக 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும், பரளி பகுதியில் பெரும்பாலான கிராமப் பகுதி மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசின் பி. எஸ்.என்.எல் சார்பில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் பரிமாற்றத்திற்கான உயர் கோபுரம் அமைக்க வேண்டும் மேலும் பரளியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வங்கிகளின் சார்பில் ஏடிஎம் மெஷின் வைக்க வேண்டும் என்பது உள்பட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்துறை அலுவலர்கள் உள்ளிட்ட கிராம சபை உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். இதைப் போலவே ரெட்டியபட்டி ஊராட்சியில் செயலர் மணிகண்டன் அறிக்கை வாசிக்க பற்றாளராக உதவியாளர் ராம்குமாரும், சாத்தம்பாடி ஊராட்சியில் செயலர் பொன்னன் அறிக்கை பாசித்தார். பற்றாளராக தட்டச்சர் கருப்பையா மணியும் வேலம்பட்டி ஊராட்சியில் செந்தில்குமரன் அறிக்கை வாசிக்க பற்றாளராக உதவியாளர் மந்தைச்சாமியும், ஆவிச்சிபட்டி ஊராட்சியில் செயலர் ராஜேஸ்குமார் அறிக்கை வாசிக்க இளநிலை உதவியாளர் அஜித் பற்றாளராகவும், பூத குடி ஊராட்சியில் வீரபாண்டியன் அறிக்கை வாசிக்க ஹரிஹரன் பற்றாளராகவும்,சமுத்திராபட்டியில் ஊராட்சி செயலர் சின்னச்சாமி அறிக்கை வாசித்தார். குடகிப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலர் (பொ) சந்திரன் அறிக்கை வாசிக்க மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிப்டன் பற்றாளர்களாகவும் செயல்பட்டனர். இதே போன்று கோட்டையூர், கோசு குறிச்சி, செல்லப்ப நாயக்கன்பட்டி, குட்டுப்பட்டி, லிங்கவாடி, முளையூர், என். புதுப்பட்டி, பண்ணுவார்பட்டி, பிள்ளையார்நத்தம், புன்னப்பட்டி, சேத்தூர், செந்துறை, சிரங்காட்டுப்பட்டி, சிறுகுடி, ஊராளிபட்டி ஆகிய ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி செயலர்கள் அறிக்கை வாசிக்க ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் பற்றாளர்கள் கலந்து கொண்டு கிராமசபை உறுப்பினர்களுடன் விவாதம் மேற்கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வருவாய்,கல்வி, சுகாதாரம், வேளாண்மை, மின்சாரம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக