மதர் தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 22வது ஆண்டு “யூஃபோரியா 2026”விழா! முன்னாள் அமைச்சர்.சி. விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில் கொண்டாட்டம்!!
இலுப்பூரில் அமைந்துள்ள மதர் தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தனது 22வது ஆண்டு விழாவான “யூஃபோரியா 2026”ஐ மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர். சி. விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில் சிறப்பாகக் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சிக்கு மதர் தெரசா கல்விக் குழுமத்தின் நிறுவனர். ஆர். சின்னதம்பி மற்றும் தலைவர். ஆர். சி. உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக வேதா டெய்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர். ரமேஷ் மற்றும் தொலைக்காட்சி நடிகர். வி.ஜே. ஆதம்ஸ் அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இயக்குநர். பூங்குன்றன், பதிவாளர். தினேஷ் குமார் முதல்வர். ராஜகயல்விழி, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பெருமக்கள், கடின உழைப்பின் அவசியம், கனவுகளை தைரியமாகத் தொடருதல், ஆர்வத்துடன் கற்றல், அறிவும் முயற்சியும் மூலம் தனித்த அடையாளத்தை உருவாக்குதல், தொழில்முனைவோர் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றை மாணவர்களுக்கு வலியுறுத்தினர்.
பள்ளியின் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளில் பெற்ற முன்னேற்றங்களை விளக்கும் ஆண்டு அறிக்கையை பள்ளி முதல்வர் வழங்கினார்.
மேலும், விழாவின் முழுமையான ஏற்பாடுகளை. மகேந்திரன் ஏற்பாடு சிறப்பாக செய்திருந்தார் .
மாணவர்களின் வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சிகள் விழாவை மேலும் சிறப்பாக்கின. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக