நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா -2026! பெ. வடிவேலு பங்கேற்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பனப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், உடற்கல்வி இயக்குனர் பாலாஜி அவர்கள் தலைமையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. 

இந்நிகழ்ச்சியில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இந்த விளையாட்டுப் போட்டியில்

25.01.2026 அன்று,

1. தடகளம் (100மீ (ம) குண்டெறிதல்).          2. கேரம் இரட்டையர்.                                        3. கயிறு இழுத்தல் போட்டி.                            4. எறிபந்தாட்டம் ( பெண்கள் மட்டும்) ஆகிய போட்டிகளும்,

27.01.2026 அன்று

1. ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்).     2. கபாடி.                                                              3. கையுந்துபந்து,         ‌                            ஆகிய போட்டிகளும் நடைபெற உள்ளன.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 3000 இரண்டாம் பரிசு 2000 மூன்றாம் பரிசு ரூபாய் 1000 என ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவினருக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் பனப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா சீனிவாசன், பனப்பாக்கம் பேரூர் கழக செயலாளர் சீனிவாசன் மற்றும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!