பண்ருட்டியில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 2026" !!
கடலூர் மாவட்டம், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஜெயக்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்பேரில் பண்ருட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் "தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா 2026" நிகழ்ச்சியாக பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் .பரமேஸ்வர பத்மநாபன் அவர்களின் தலைமையில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் முரளி மற்றும் போக்குவரத்து போலீசார் பண்ருட்டி பேருந்து நிலையம் மற்றும் பண்ருட்டி பேருந்து நிறுத்தங்களில் உள்ள பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் தங்களின் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு ஓட்டுநர் உரிமம் பெறாமல் இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என கூறியும் அதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறியும் சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக