ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2026-2027 தொழில் பள்ளி- அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், 2026 -2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழில் பள்ளி துவங்குதல் அங்கீகாரம் புதுப்பித்தல் தொழில் பள்ளிகளில் புதிய தொழில் பிரிவுகள் / தொழில் பிரிவுகளில் கூடுதல். அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன 02-01- 2026 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2026 - 2027 ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழில் பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழில் பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வு கட்டணம் RTGS/NEFT மூலம் செலுத்த வேண்டும்.
அனைத்து தொழில் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ ,5000 /- மற்றும் ஆய்வு கட்டணம் ரூ ,8000/- செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்28-02-2026 இதற்குப் பின் தரப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள்www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திரகலா IAS அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி எண்: 044-22501006(113)
EMAIL ID. detischennai@gmail.com.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக