கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில் 2024-2025-ஆம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த நெசவாளர் விருது!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்கள் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில் 2024-2025-ஆம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த நெசவாளர் விருது, சிறந்த வடிவமைப்பாளர்களுக்கான விருது மற்றும் சிறந்த இளம் வடிவமைப்பாளர்கள் விருது ஆகிய விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுடன் காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் மற்றும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை, அரசு செயலாளர். வே. அமுதவல்லி, இ.ஆ.ப., கைத்தறித் துறை இயக்குநர். மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர். கவிதா ராமு, இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக