தனக்கன்குளம் ஊராட்சியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் – ரூ.2 லட்சம் மதிப்பில் பரிசுகள்!!
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தவெக தலைவர்.விஜய் அவர்களின் நல்ஆசியுடனும், கழக பொதுச் செயலாளர். N. ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட செயலாளர். M. மருதுபாண்டியன் அவர்களின் தலைமையில், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி தென்மேற்கு ஒன்றியத்தின் முன்னிலையில், தனக்கன்குளம் ஊராட்சியில் கிராம சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஒன்றிய துணை செயலாளர்கள். ஜெகதீஸ், ஆனந்த், ஒன்றிய செயற்குழு உறுப்பினர். முத்துராம், செயற்குழு உறுப்பினர்கள், தனக்கன்குளம் கிளை செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஒருங்கிணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
விழாவின் முக்கிய அம்சமாக, இளைய தலைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல், மகளிர் மேம்பாட்டை முன்னிறுத்தும் வகையில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு, சமூக சமத்துவத்தின் அடையாளமாக விழா அமைந்தது.
கிராம மக்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக கலந்து கொண்டு, சமத்துவம், ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகிய மதிப்புகளை வலியுறுத்திய இந்த விழாவை பாராட்டினர். குறிப்பாக, விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த தென்மேற்கு ஒன்றிய தலைமை மற்றும் தனக்கன்குளம் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சி, தமிழக வெற்றி கழகத்தின் சமூக நலப் பணிகளுக்கும், கிராம வளர்ச்சிக்கும், இளைய தலைமுறையின் திறமைக்கு ஊக்கமளிக்கும் முயற்சிகளுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது திருப்பரங்குன்றம் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்று வருகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக