.புதுக்கோட்டை அருகே வன்னியன்விடுதி கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு!!
இன்புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதி கிராமத்தில் வருகின்ற 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி மிக விமர்சையாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாட்டு பணிகளை தமிழக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர். மெய்யநாதன் ஆய்வு செய்து விழாக் குழுவினருக்கு அறிவுரைகளை வழங்கினார்.
தமிழகத்திலேயே அதிக ஜல்லிகட்டு போட்டி நடைபெறும் மாவட்டமான புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதி கிராமத்தில், வினாயகர், மாயன் பெருமாள் கோயில் தை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி மிக விமரிசையாக நடைபெற உள்ளது.
இங்கு ஏற்கனவே நிரந்தர வாடிவாசல் மற்றும் விழா மேடை அமைக்கப்பட்டுள்ள சூழலில் அங்கு நடைபெற்று வரும் மற்ற முன்னேற்பாடு பணிகளை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு செய்தார்.
பின்னர் காளைகள் கொண்டு வரும் வழிகள் பார்வையாளர் மாடம் காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியேறும் பகுதி மற்றும் தடுப்பு வேலிகள் உள்ளிட்ட பணிகளையும், பாதுகாப்பு பணியில் உள்ளவர்களுக்கு காலை உணவு, மதியம் உணவு தண்ணிர் வசதி, ஆகியவைகளை தொய்வில்லாமல் பார்த்து கொள்ளவேண்டும். அமைச்சர் மெய்யநாதன் விழா குழுவினருக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் வில்லியம் மோசஸ் மற்றும் வன்னியன்விடுதி கிராம பொதுமக்கள், விழா கமிட்டியினர் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக