தேனியில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 129வது பிறந்த நாள் விழா!!

தேனி மாவட்ட சீர்மரபினர் நலச்சங்கம் (DNT) இளைஞரணி சார்பாக தேசபக்தி உணர்வோடும் பெருமையோடும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட இணை அமைப்பாளர். செல்வபாண்டியன் .ஜீ அவர்கள் தலைமை தாங்கினார்கள்.தேனி நகர அமைப்பாளர். கனகுபாண்டி. ஜீ அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

நிகழ்வில் பல்வேறு பொறுப்பாளர்கள் மற்றும் DNT பொறுப்பாள்கள் மகளிர் பொறுப்பாளர்கள் இளைஞர்கள் கலந்துகொண்டு

நேதாஜியின் தியாக வாழ்க்கையை நினைவுகூர்ந்தனர்.இவ்விழாவில்மாவட்ட அமைப்பாளர். கோவிந்தராஜ் .ஜீ அவர்கள் உரையாற்றும் போது,

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறப்பு,தேச விடுதலைக்காக அவர் மேற்கொண்ட வீரப்போராட்டங்கள்:

“செய் அல்லது செத்து மடி” என்ற முழக்கத்தின் ஆழமான பொருள்,

தேசத்தின் மீது அவர் கொண்ட அசைக்க முடியாத அன்பு ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைத்தார்.

அவரது உரை:

இளைஞர்களிடையே தேசபக்தியை ஊட்டும் வகையிலும்,நேதாஜியின் வீர வரலாற்றை நினைவூட்டும் வகையிலும் மிகவும் சிறப்பாக அமைந்தது.இந்த நிகழ்வு,தேசத்தின் விடுதலைக்காக உயிரையே அர்ப்பணித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் ஒரு பெருமைக்குரிய தருணமாக அமைந்தது.இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!