சிறுகுடி அரசுப் பள்ளியில் நடைபெற்ற 10ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள சிறுகுடியில் அரசு மேனிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1995 - 96 ஆம் கல்வியாண்டில் 10- ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் 30 ஆண்டுகள் கழித்து பள்ளியில் ஒன்று கூடிய சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அங்குள்ள ஊரணி கரையில் ஒன்று கூடிய ஆசிரியர்கள் உள்பட மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க, கிராமிய நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டு ஊர்வலமாக பள்ளிக்குச் அழைத்துச் சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் கடவுள் வாழ்த்து பாடியதை தொடர்ந்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் பள்ளியில் பணிபுரிந்த தங்களது ஆசிரியர்களிடம் ஒவ்வொருவரும் அறிமுகப் படுத்திக் கொண்டு ஆசி பெற்றனர். பின்னர் மாணவ - மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளிப் பருவத்தில் நடந்த தங்களின் மலரும் நினைவுகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தாங்கள் பயின்ற பள்ளி வகுப்பறைகள், விளையாடிய மைதானம் ஆகியவற்றை பார்வையிட்டனர். வாழ்த்துக்கள் வழங்கிய முன்னாள் ஆசிரியர்கள் அனைவருடனும் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அங்கு அவர்களுக்கிடையே
விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர். இதில் மாணவ-மாணவிகள் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டதுடன், சில மாணவிகள் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற வெளி நாட்டிலிருந்தும் வந்து இவ்விழாவில் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் ஆசிரியர், சக நண்பர்களுடன் தமிழ் மொழியை உச்சரிப்புடன் சிறப்பாக பேசி மொழி வளத்தை நினைவு படுத்திக் கொண்டார்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக